பாலில் கலந்த எலி மருந்து... துடிதுடித்த தாய், குழந்தைகள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
காடுவெட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் - பிரமிளா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரமிளா தனது இரண்டு மகள்களுடன் சென்னீர்குப்பத்தில்
வாடகை வீட்டில் வசித்து வந்தார். இன்று திடீரென பிரமிளா பாலில் எலி மருந்தை கலந்து அவரது இரண்டு மகள்களுக்கும் குடிக்க கொடுக்க விட்டு அவரும் குடித்துள்ளார். மூவரும் வீட்டில் வாந்தி எடுத்ததால், உறவினர்கள் மீட்டு பூந்தமல்லியில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மனைவி தனது மகள்களுக்கு எலி மருந்து கொடுத்து தற்கொலைக்கு முயன்றது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story