இன்று டோக்கன் எடுத்தால் ஒரு வாரம் கழிச்சி தானா? - அரசு ஹாஸ்பிடலை பார்த்தாலே அலறும் மக்கள்

x

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,

இதய நோய்க்கு எக்கோ ஸ்கேன் எடுக்க நோயாளிகள்

அலைந்து வருகின்றனர் ராமநாதபுரத்தில் 140 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு

மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளும்,

உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இதய நோய்க்கு எக்கோ ஸ்கேன் பரிசோதனை எடுக்க போதிய மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் இல்லாததால், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டுமே எக்கோ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இன்று டோக்கன் வாங்கினால் ஒரு வாரம் கழித்து தான் எக்கோ ஸ்கேன் எடுக்க முடியும்

என்று அங்குள்ள பணியாளர்கள் தெரிவிப்பதாக நோயாளிகள்

கூறுகின்றனர். இதனால் இதய நோயளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தேவையான அளவு மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் அரசு நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்