மாமியார் வீடு புகுந்து மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய காவலர்
பரமக்குடியை சேர்ந்தவர் நாகேந்திரன். திருவாரூர் மாவட்டம் இடையூறு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவருக்கு, சர்மிளா என்பவருடன் திருமணமாகி ஆண் குழந்தை ஒன்றுள்ள நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நாகேந்திரனின் மனைவி சர்மிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தொடர்ந்து கணவருக்கு வக்கீல் நோட்டீஸூம் அவர் அனுப்பிய நிலையில், ஆத்திரத்தில் இருந்த நாகேந்திரன், மதுபோதையில் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த சர்மிளா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story