கட்டுமான நிறுவனங்களில் நடந்த சோதனை - அமலாக்கத்துறையிடம் சிக்கிய ஆவணங்கள்... அம்பலமான பயங்கர மோசடி

x

2015 முதல் 2017ம் ஆண்டு காலகட்டத்தில், பின்னி மில்லிற்கு தொடர்புடைய 14 ஏக்கர் நிலத்தை 490 கோடி ரூபாய்க்கு வாங்கிய 2 கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டின. இந்த குடியிருப்புகளுக்கு அனுமதிகளை பெற அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், லேண்ட் மார்க் கட்டுமான நிறுவன இயக்குனர் உதயகுமார், கேஎல்பி கட்டுமான இயக்குனர்கள் சுனில் கேட்பாளியா உள்ளிட்டோருக்கு தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, டிஜிட்டல் ஆவணங்கள், கணக்கில் வராத அசையும், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. போலி நிறுவனங்கள் மூலம், முறையில்லாத தெளிவற்ற நிதி, நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மொரிசியசில் இருந்து, போலி நிறுவனம் மூலம், 280 கோடி ரூபாய் நிதி சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதும், மதுபான தொழில், ரியல் எஸ்டேட் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதற்கு, நீலகண்டன் என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்