புதுகை என்கவுன்டர்.. "அனாதை பிணம் மாறி கிடக்குறாரு"
புதுக்கோட்டையில் நடைபெற்ற என்கவுண்டருக்கு மூளையாக செயல்பட்டவர் திருச்சி எஸ் பி வருண் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் காட்டுப் பகுதியில் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார் . திருச்சியில் தீபக் ராஜா என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான துரைசாமியையும், அவருடன் இருந்த ஒருவரையும் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற என்கவுண்டர் க்கு முழுவதுமாக ஸ்கெட்ச் போட்டவர் எஸ்.பி. வருண் என்பது தெரியவந்துள்ளது. ரவுடி துரைசாமி புதுக்கோட்டை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பது குறித்து, அம்மாவட்ட எஸ்.பி.யும், தமது மனைவியுமான வந்திதா பாண்டேவுக்கு, திருச்சி எஸ்.பி. வருண் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே,
ஆலங்குடி காவல்துறை ஆய்வாளர் முத்தையன் உள்ளிட்ட நான்கு பேரை தேடுதல் வேட்டைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகே, தேடுதல் வேட்டையில் என்கவுண்டர் நடந்ததும் தெரியவந்துள்ளது.