தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் பேச்சு | PM Modi

x

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்க உள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாடு முழுவதில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவர்களில், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். விருது பெறப்போகும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி, இளைஞர்களை திறமையாக்கி எதிர்காலத்தை தயார்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மேலும், உள்ளூர் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப்பற்றி மாணவர்கள் அறிய ஊக்குவிக்குமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்