போலீஸ் வேனால் பெண் கொடூர மரணம்.. வேன் சிசிடிவிக்கு அருகே வந்த பயங்கரம்.. குலைநடுக்க வீடியோ

x

பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீஸ் வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதும் சிசிடிவி காட்சி உள்ளது

முசிறி அருகே பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி இருவர் காயம்*

திருச்சி மாவட்டம், தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே சீலைப் பிள்ளையார்புத்தூரில் இரு சமுதாயத்தினரை அவதூறாக எழுதி துண்டு பிரசுரம் ஒட்டியதை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 50க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் வாகனம் ஆற்றங் கரையிலிருந்து சீலைப்பிள்ளையார் புத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம் போலீஸ் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை சாய்த்து அடியில் சிக்கிக் கொண்ட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் சுமார் 45 மதிக்கத்தக்க பெண் இறந்து போனார். உடன் வந்தவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோன்று மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகிறார். இதையடுத்து திருச்சி சரக டிஐஜி மனோகரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின், முசிறி கோட்டாட்சியர் ராஜன், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையா, வருவாய் துறையினர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்