திருட்டு நகைகளை உருக்கிய வியாபாரிகள் - போலீஸ் அதிரடி - குற்றவாளிகளுக்கு ஆதரவாக இறங்கிய சங்கம்

x

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள, காசுகடை தெருவில் நகை கடை நடத்தி வருபவர் சி.கே. முருகன். இவரது கடையில் மோகன் பாபு, சிவகுமார் ஆகிய இருவர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு காவல்துறையினர் 60 லட்சம் மதிப்பிலான திருட்டு நகைகளை வாங்கி உருக்கிய வழக்கில் கடை உரிமையாளர் சி.கே. முருகன், பணியாளர் இருவர் என 3 பேரையும் கைது செய்தனர். இதை அறிந்த அப்பகுதி நகை கடை சங்கத்தினர், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக மேலரத வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே, நகை கடை உரிமையாளரை கைது செய்திருக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நகை கடை சங்கத்தினர் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்