காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... போலீஸ் ஸ்டேஷனுக்குள் தஞ்சம் புகுந்த ஜோடி

x

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி, தனது காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த பிகாம் மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனார். இது குறித்து, குடியாத்தம் நகர போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தனது காதலனுடன் மாணவி, காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து மாணவி மேஜர் என்பதால், அவரது காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்