இயற்கையின் கோரத்தாண்டவம்... ஒரே நாளில் மடிந்த மரங்கள்... அதிர்ச்சி காட்சிகள்
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே நாளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. எனினும், 4 குழுக்களாக உள்ள மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மரங்களை அப்புறப்படுத்தினர். இதேபோல், தீயணைப்பு துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும், தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story