"இந்த ஆம்னி பேருந்துகளில் பயணிக்காதீர்கள்" - "எப்போது வேண்டுமானாலும் இறக்கிவிடப்படலாம்"
"இந்த ஆம்னி பேருந்துகளில் பயணிக்காதீர்கள்" - "எப்போது வேண்டுமானாலும் இறக்கிவிடப்படலாம்"
வெளிமாநில பதிவெண்களை கொண்ட 547 ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 547 ஆம்னி பேருந்துகளும் தங்களது பதிவெண்களை இன்னும் தமிழகத்திற்கு மாற்றவில்லை. இதனால், பதிவெண்களை மாற்றும் வரை அந்த 547 ஆம்னி பேருந்துகளும் தமிழகத்தில் இயங்காது என கூறப்படுகிறது. மேலும், அவ்வாறு இயங்கினால், அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story