போலி ஆவணங்களை பயன்படுத்தி வரும் வட மாநிலத்தவர்கள்..என்.ஐ.ஏ. வைத்த செக் | Tamilnadu

x

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில், பங்களாதேஷை சேர்ந்த இளைஞர்கள், போலி ஆவணங்களை பயன்படுத்தி பணியாற்றி வருவதாகவும், முறைகேடாக அவர்கள் திருப்பூரில் தங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்லடம் அடுத்துள்ள அருள்புரம், அள்ளாளபுரம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்