தூரத்தில் பார்த்தால் அழகு.. அருகே சென்றால் அபாயம்.. இந்த வழியே வரும் வாகனங்கள் உஷார்
ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழையால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது, ரம்யமாக காட்சியளிக்கிறது. அருவி அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நீர்வீழ்ச்சி செல்லும் பாதையும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சாலை ஓரம் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் யாரும் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுக்க வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது
Next Story