காற்றோடு கைகோர்த்து மிரட்டும் மழை.. ரெட் அலர்ட்.. மக்களுக்கு எச்சரிக்கை

x

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 37 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தொடர் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18மற்றும் 19ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லோசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லோசனது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு, மத்திய அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரையிலும், இடையிடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.


Next Story

மேலும் செய்திகள்