``நெஞ்செலும்பை நொறுக்கி, சயனைடு ஊற்றி..'' - மாமியார் செய்த கேவலம்..பார்த்த மருமகளுக்கு நேர்ந்த கோரம்

x

திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகமும், அதன் பகீர் கிளப்பும் பின்னணி குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு..

நீலகிரி மாவட்டம் வண்ணாரப்பேட்டைய சேர்ந்த ஆஷிகா பர்வீனுக்கு அவரது பெற்றோர் காந்தல் பகுதியைச் சேர்ந்த இம்ரான்கானுக்கு திருமணம் செய்து வைத்தனர். மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக 20 லட்ச ரூபாய் பணமும், 35 சவரன் நகையும் கொடுத்து இருக்கின்றனர்.

திருமண வாழ்க்கை சந்தோஷமாக தொடங்கினாலும் நாட்கள் செல்ல செல்ல ஆஷிகாவிற்கு கணவன் மற்றும் மாமியார் மூலமாக கொடுமைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. இரண்டு வயதில் குழந்தை உள்ள நிலையில் இருவரும் தன்னை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாக சொல்லியிருக்கிறார் ஆஷிகா..

மாமியார் யாஸ்மின், வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதைப் பார்த்ததாகத் தன் தோழியிடம் கூறி இருக்கிறார் ஆஷிகா. விரைவில் தனி குடித்தனம் செல்ல இருப்பதாக தன் தோழியிடமும் கூறி நிலையில், திடீரென யாஸ்மினிடம் இருந்து ஆஷிகாவின் பெற்றோருக்கு வந்தது தொலைபேசி அழைப்பு... ஆஷிகாவிற்கு வலிப்பு வந்து விட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

மருத்துவமனைக்கு பதற்றத்துடன் சென்ற ஆஷிகாவின் பெற்றோரிடம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூற பதறிப்போனார்கள் அனைவருமே. தனது மகளை யாஸ்மின் மற்றும் அவரது மகன் இம்ரான் இருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்த விட்டதாக கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர் அவர்கள். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஆஷிகாவின் நெஞ்சு மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்து இருப்பதாகவும், உடம்பில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரிந்தும் கிட்டத்தட்ட 75 நாட்கள் கடந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆஷிகா குடும்பத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பின்னர் யாஸ்மின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் என்னதான் நடந்தது என்பது உரிய விசாரணைக்கு பின்னரே தெரியவரும்..


Next Story

மேலும் செய்திகள்