நீலகிரி வனப்பகுதிக்குள் அத்துமீறல்.. யூடியூபில் சிக்கிய 3 பேர்

x

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் புகுந்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் தாகூர் சுரேஷ் பாபு. இவர், உதகையை சேர்ந்த பைசல் ரகுமான் மற்றும முகமது நவாஸ் ஆகியோருடன் இணைந்து, தலைக்குந்தா பகுதியில் உள்ள எர்த் அன்ட் டேம் என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சாகச வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அதனை, யூடியுபில் பதிவிட்ட நிலையில், உதகை வனத்துறையினரின் பார்வைக்கு சென்றது. தொடர்ந்து, மூவரையும் பிடித்த வனத்துறையினர், தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதையடுத்து, மூவரும்தங்களது தவறுக்கு வருத்தமும் தெரிவித்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்