நீலகிரியில் அட்டகாசம் செய்யும் 3 காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ

x

நீலகிரி அஞ்சு குன்னு, மற்றும் தேவர் சோலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆண் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது... முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமிலிருந்து 4 கும்கி யானைகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டன... கிராம பகுதிக்குள் யானை வருவதைத் தடுக்க இரவு பகலாக வனப் பணியாளர்களுடன் 4 கும்கி யானைகளும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுவதால் அடுத்த கட்டமாக ட்ரோன் கேமராவை இயக்கி 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்