மாயமான பைக், டூவீலர் ஒரே இடத்தில்... பைக் ஓனர் சொன்ன ஷாக் செய்தி... நீலகிரியில் பரபரப்பு
கூடலூரில் அரசுப் பேருந்து, பைக் கடத்தப்பட்ட விவகாரத்தில், பேருந்தும் பைக்கும் ஒரே இடத்தில் இருந்ததால், வேறு யாராவது உதவி செய்தார்களா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவாலாஹட்டி என்பது 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலையில் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை யார் ஓட்டி வந்தது? பேருந்தும் இருசக்கர வாகனமும் ஒரே பகுதியில் எப்படி கொண்டு வந்து நிறுத்தப்பட்டது? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அரசுப் பேருந்து கடத்தலுக்கு தன்னுடைய பைக் பயன்படுத்தப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக, பைக் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Next Story