சென்னை மெட்ரோ ரயிலில் வரப்போகும் புதிய மாற்றம்

x

சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதற்கு தேவைப்படும் 300 கோடி ரூபாயை கடனாக பெறுவதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது.சென்னை மெட்ரோ ரயில், இரண்டு வழித்தடங்களில் சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில், நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளும், மாதத்திற்கு 80 லட்சத்திற்கும் மேலாக பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காலை மற்றும் மாலை நெரிசல்மிகு நேரங்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலோடு பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு ரயிலுக்கு கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்க முடிவு செய்து, ஜப்பான் நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு பெட்டிக்கு 10 கோடி ரூபாய் வீதம், 180 பெட்டிகளை வாங்க நிதி கேட்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 30 ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு 300 கோடி ரூபாய், தானியங்கி டிக்கெட் வசூல் முறைக்கு 150 கோடி ரூபாய் என மொத்தம் 450 கோடி ரூபாயை கடனாக பெற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்