நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - சிக்கிய 6 பேர்.. வெளியான பரபரப்பு தகவல்
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிகார் மாநிலத்தில் பல்வேறு மையங்களில் தேர்வுக்கு முன்னதாகவே நீட் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் உட்பட பலரை பீகார் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேவிபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள எய்ம்ஸ்-தியோகர் அருகே வாடகை வீட்டில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இதுவரை நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகார் காவல்துறையினர் இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர்.
Next Story