கொலை, பழிக்குப்பழி ஸ்கெட்ச்; VAO ஆபிசில்...வெடிகுண்டுகள் அதிர்ந்த கடலூர்... வெளியான பகீர் பின்னணி
நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடத்தின் மேல் பகுதியில், நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக ஆனத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் கே.என்.பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்ற இருவரை கைது செய்தனர். விசாரணையில், ராஜேஷ் ரவுடி என்பதும், அவர் மீது பல குற்றவழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பாக ராஜேஷின் நண்பர்கள் தரப்புக்குள் மோதல் ஏற்பட்டதில், பாலமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில், ராஜேஷின் நண்பர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்கள் வெளியில் வந்ததும் முன்விரோதம் காரணமாக ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் தன்னை தற்கொத்து கொள்ள, யூடியூப் வீடியோக்கள் பார்த்து ராஜேஷ் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததும், அதனை தனது நண்பர் முகிலன் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவர, தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாகியுள்ள முகிலன் என்பவரை தேடி வருகின்றனர்.