2 சித்தர்களை நல்லடக்கம் செய்த நடிகர் லாரன்ஸ் தாயார்
சமூக சேவைக்காக நடிகர் ரஜினியிடம் ஆம்புலன்ஸ் பெற்ற சமூக சேவகரான மணிமாறன், ஆதரவற்றோரின் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலையில் மணிமாறனுடன் சேர்ந்து, நடிகர் ராகவா லாரன்சின் தாயார் கண்மணி, 2 சித்தர்களின் உடல்களை நல்லடக்கம் செய்தார். இதுகுறித்து பேசிய கண்மணி, மணிமாறனின் சமூக சேவை பாராட்டுக்குரியது என்றும், அவருடன் சேர்ந்து நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டது மனநிறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story