காணாமல் போன மருத்துவர்கள்.. வயிற்றிலேயே இறந்த குழந்தை.. சாலை போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..
மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷின் மனைவி கவிநிலா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நாட்டுச் சாலை உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கவிநிலாவை பரிசோதனை செய்த மருத்தவர்கள், குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அறுவை கிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து, கவிநிலாவின் உயிரை காப்பாற்றினர். இந்நிலையில், குழந்தையின் இறப்புக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்தவர்கள் இல்லாததே காரணம் என கூறி, உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story