தோடர் பழங்குடியினருடன் நடனமாடிய அமைச்சர் கயல்விழி

x

தோடர் பழங்குடியினருடன் நடனமாடிய அமைச்சர் கயல்விழி

உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழாவையொட்டி, தோடர் பழங்குடியின பெண்களுடன் இணைந்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடனமாடி மகிழ்ந்தார். நீலகிரி மாவட்டம் முத்துநாடு மந்து கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அங்குள்ள பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, பழங்குடியின மக்களுடன் இணைந்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாரம்பரிய நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்