வழிமறித்து நடத்துனரை சுத்து போட்டு சரமாரியாக தாக்கிய கும்பல்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரியும் வீரமணிகண்டன் என்பவர், நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் அருகே, மர்ம நபர்கள் பேருந்தை வழி மறைத்து பணியில் இருந்த வீரமணிகண்டனை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story