காமெடியன் "டூ" தத்துவ ஞானி?.. யார் இந்த மகாவிஷ்ணு
அமைச்சர் பைட்(என்னுடைய ஆசிரியரை நீ அவமானப்படுத்தி இருக்கிறாய்-உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்ற டயலாக்)
எப்போதும் சாந்தமாய் பேசும் அமைச்சர் அன்பில் மகேஷையே ஆக்ரோஷப்பட வைத்து விட்டார் இந்த சர்ச்சை ஆசாமி மகா விஷ்ணு...
பிறந்தது மதுரை என்றாலும், திருப்பூர் தான் பூர்வீகம் இந்த மகா விஷ்ணுவுக்கு...
இயற்பெயரே இதுதானா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்... ஆனால் அசரடிக்கும் வகையில் அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?...
மகாவிஷ்ணுவின் தாய் கர்ப்பமாக இருந்த போது...அவரது கணவருடன் சண்டை ஏற்பட்டதால் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாராம்.. அப்போது வந்த குடுகுடுப்பைக்காரர்..."உனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது...அதற்கு பெருமாள் அவதாரத்தில் பெயர் வைக்க வேண்டும்" என கூற...அவர் சொன்னபடியே மகன் பிறந்ததால் பெற்றோர் "மகா விஷ்ணு" என்று பெயர் வைத்து விட்டனராம்...
மதுரை மகா டூ பிரம்ம ஸ்ரீ மகாவிஷ்ணு...பிரம்மாண்ட முன்னேற்றம்...
பிறந்தது வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில்...ஆனால் இப்போது வாழ்வதோ ஹைடெக்கான வாழ்க்கை...எப்படி இந்த அசுர வளர்ச்சி?...
10ம் வகுப்பு வரைதான் படிப்பு...துவக்க காலங்களில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இவர் செய்த காமெடியெல்லாம் பார்த்தால் இம்மியளவும் சிரிப்பு வரவில்லை...அத்தனையும் கிரிஞ்ச் ரகம்... ஆனால் இப்போது திடீரென தத்துவார்த்தமான கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்...
நாடு நாடாக பறந்து யோக பயிற்சி எடுத்து வரும் மகா விஷ்ணுவுக்கு அந்த பயிற்சி வகுப்புகள் மூலமும்...யூ டியூப் மூலமும் தான் வருமானமாம்...
பயிற்சி வகுப்புகளுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் கறக்கிறார்...
பணம் இல்லாமல் இந்த உலகம் இயங்குமா? அப்போதிருக்கும் விலைவாசியும் இப்போதிருக்கும் விலைவாசியும் ஒன்னா என ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு போல் பாடம் எடுக்கிறார் மகா விஷ்ணு...
தான் பகட்டாக வாழ்வதை வீடியோவாக்கி பின்னால் படையப்பா bgm, அனிருத் bgm எல்லாம் போட்டு இன்ஸ்டாவை அதகளப்படுத்துகிறார் மகா விஷ்ணு...
இவரது பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் பணிகள் செய்து வந்த மகாவிஷ்ணுவின் நண்பர் சித்தா வினோத் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... ஆனால் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என விளக்கமளித்திருந்தார் மகா விஷ்ணு...
"நமக்கிருக்க பிரச்சினைக்கு கருங்காலி மால என்ன...கருங்காலி மரத்தையே தூக்கி கழுத்துல மாட்டுனாலும் தீராது" என்று இணையவாசிகள் கிண்டலடிக்குமளவு கொஞ்ச நாள்களுக்கு முன்பு கூட கருங்காலி மாலையை வைத்து மிகப்பெரிய பிசினசே நடைபெற்றதே... அதையும் செய்து வந்துள்ளார் மகா விஷ்ணு...
துவக்கத்தில் திரைத்துறையையே தன் கனவாய் நினைத்திருந்த மகா விஷ்ணு நடிகர் ரகுமானை வைத்து மலையாளத்தில் ஒரு படத்தைத் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது... அதற்காக அசத்தப்போவது யார் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்டவர்களிடம் கால்ஷீட்டெல்லாம் கேட்டாராம்...
ஒரு ஹீரோவைப் போல் ஆன்மிகவாதிகள் மகா விஷ்ணுவை கொண்டாடி வந்த நிலையில், திடீரென அவர் சர்ச்சையில் சிக்கக் காரணம்... அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தாக்க உரை ஆற்றினார் என்பதை விட..."போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள்" என்று வார்த்தையை விட...அங்கிருந்த பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் தனக்காகவும் தன்னைப் போன்றவர்களுக்காகவும் தைரியமாக எழுந்து குரல் கொடுத்ததால் தான்...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்ந்து வரும் நம் சமூகத்தில் இப்படியொரு கருத்தைக் கூறினால் யாருக்குத் தான் கோபம் வராது?
மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது...
சம்பந்தப்பட்ட அசோக் நகர் அரசு பள்ளி ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்...
இறைவனை அடைய தாம்பத்தியமே ஒரே வழி என்றும்...தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு வாழ்க்கையில் தான் செய்த தவறுகளும் காரணம் என்றெல்லாம் சர்ச்சையாக பேசியிருக்கிறார் மகா விஷ்ணு...
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய்...இன்னும் என்னென்ன அதிர்ச்சியெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறதோ மகா விஷ்ணு விவகாரத்தில்...பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...