கொலை வழக்கு... சிறையில் உள்ள பெண் இன்ஸ்பெக்ட்டர்... கோர்ட்டில் பரபரப்பு தகவல்

x

கோவில் திருவிழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட

விவாகரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி காவல்

ஆய்வாளர் சத்தியசீலா சென்னை உயர் நீதிமன்றத்தின்

மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மே 22இல் நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கி கொலை செய்த வழக்கில் தன் மீதும் புகார் எழுந்துள்ளதாக கூறியிருந்தார். முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம் பெறாத நிலையில், பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள தனக்கு ஜாமீன் வழங்க கோரியிருந்தார். முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் கிடையாது என்றும், சாட்சியங்கள் அடிப்படையில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர்

வாதாடினார். காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி புகழேந்தி, வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதி ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்