எவ்வளவு பட்டும் திருந்தாத டாக்டர்-ஆய்வுக்கு வந்த அதிகாரியே டாக்டராக மாறியதால் மதுரையில் அதிர்ச்சி
மதுரையில் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆய்வுக்காக வந்த அதிகாரி, மருத்துவம் பார்த்தார்.திருப்பரங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் அடிக்கடி வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, மதுரை மாநகராட்சி நகர அலுவலர் வினோத்குமார் திடீர் ஆய்வை மேற்கொண்டார். காலை 9 மணிக்கு வரவேண்டிய மருத்துவர் பூபேஷ், காலை பத்து மணி ஆகியும் வரவில்லை. இதனால் ஆய்வுக்கு வந்த நகர அலுவலர் வினோத்குமார், காத்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். மருத்துவர் பூபேஷ், இதற்கு முன்னால் திண்டுக்கல்லில் பணியாற்றியதும், சுகாதாரத்துறை அமைச்சரின் ஆய்வின்போது, அவர் இல்லாததால், திருப்பரங்குன்றத்திற்கு பணியிட மாற்றம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story