பிரம்மாண்டத்திற்கு தயாராகும் மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தை ஜனவரி முதல் வாரத்தில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுரை கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு வருகிறது. 44 கோடியே 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடந்ததும் வகையில் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசிக்கும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த அரங்கத்தை ஜனவரி முதல் வாரத்தில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story