ரத்த வெள்ளத்தில் துடித்த பாஜக முக்கிய பிரமுகர் - அதிகாலையில் மதுரையை உலுக்கிய பயங்கரம்
மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பாஜக OBC அணியின் மதுரை மாவட்ட செயலாளரான இவர், பைனான்ஸ் தொழிலையும், ரைஸ்மில் ஒன்றும் நடத்தி வந்தார். இன்று அதிகாலை, வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள தனது குடோனுக்கு, பைக்கில் சென்று கொண்டிருந்த சக்திவேலை மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் , மதுரை செல்லூரை சேர்ந்த ரஞ்சித் மற்றும் மருது ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், இருவரும், சக்திவேலின் ரைஸ்மில்லில் பணிபுரிந்து வந்ததாகவும், சில மாதங்களாக சக்திவேல் ஊதியம் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வந்ததால் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story