"சாதியை மன்னிக்கலாம்" - வைரமுத்து பரபரப்பு ட்விட் | Vairamuthu

x

நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்... "நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில்

விழுந்த வெட்டு... சாதியைக்கூட மன்னிக்கலாம்... அதற்கு

இழிவு பெருமை கற்பித்தவரை மன்னிக்க முடியாது" என கண்டனம் தெரிவித்துள்ள அவர், சமூகத் தலைவர்கள் முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது மதம் மாறுவதுபோல்

சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்