வாச்சாத்தியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம்..வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு

x

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் சேவை மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது. நீதிமன்றம் அறிவித்தபடி, வாச்சாத்தி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று, ஆணையத்தின் செயல் தலைவர் நீதிபதி எஸ்.வைத்தியநாதனிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், வாச்சாத்தி வன்முறையில் பாதிக்கப்பட்ட 133 பேரின் வீடுகள், கால்நடைகள் சூறையாடப்பட்டதாகவும், அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது. முகாமில் பேசிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், வசதியற்றவர்களுக்கு அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே சட்டப்பணிகள் சேவை மையத்தின் முதல் குறிக்கோள் என்று கூறினார். சட்ட உதவி கோருபவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தால், அவர்களுக்கு சட்ட ஆணையமே உதவி செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்