கள்ளக்காதலனுடன் கம்பிநீட்டிய மனைவி... தலைக்கேறிய வெறி... குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர கணவன்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியை சேர்ந்த தம்பதி சக்திவேல்-சுதா. தம்பதி இருவரும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில், செங்கல் சூளை நடத்தி வந்த பூவரசனுடன் சுதாவுக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இது குறித்து கண்டித்ததால் சக்திவேலை அவரது மனைவி சுதா பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் திருமணம் செய்ய இருந்த சக்திவேலுக்கு, அவரின் குழந்தையை காரணம் கூறி பெண் தர மறுத்திருக்கின்றனர். இதனால் விரக்தியில் இருந்த அவர், தனது 3 வயது குழந்தையை தரையில் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்