2ம் மனைவியோடு கமிட்டான கணவன்..வாழ்க்கையில் திரும்பி வந்த முதல் தாரம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கணவன் தள்ளிவிட்டதில், மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு சுதாராணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு, தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவி மீண்டும் வந்து, ஒன்றாக வாழலாம் என வேலாயுதத்தை வற்புறுத்தியுள்ளார். இதனால், வேலாயுதத்திற்கும், சுதாராணிக்கும் இடையே தகராறு நிலவியுள்ளது. இந்த தகராறு முற்றவே, சுதாராணியை, வேலாயுதம், அடித்து தள்ளிவிட்டுள்ளார். சுதாராணியின் பின் பக்க மண்டையானது சுவரில் இடித்து, அவர் அங்கேயே மயங்கிவிழுந்துள்ளார். சுதாராணியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வேலாயுதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்