டன் கணக்காக கொட்ட கொட்ட வந்த கெளுத்தி மீன்கள்... மொத்தமாக மண்ணில் புதைத்த அதிகாரிகள்
கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட ஒரு டன் அளவிலான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன... மத்திய மாநில அரசு சார்பில் தடை செய்யப்பட்ட கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மிட்டஹள்ளி புதூர் கிராமத்தில் பெருசப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வளர்த்து அவற்றை விற்பனைக்காக லாரியில் ஏற்றி செல்வது ஆய்வில் தெரிய வந்தது... மீன்வளத்துறை அதிகாரிகள் ஒரு டன் எடை கொண்ட மீன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்பு என்பவர் அவை தனக்கு சொந்தமானவை என்று குறிப்பிட்டுள்ளார்... பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் கேஆர்பி அணையின் மீன்வளத்துறை அலுவலகம் அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டன... ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story