கல்லூரி மாணவருடன் தகாத உறவில் இருந்த மருமகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவரது மகனான ஏழுமலைக்கு 3 வருடங்களுக்கு முன் பவித்ரா என்பவருடன் திருமணமான நிலையில், 2 வயதில் பெண் குழந்தை ஒருவர் உள்ளார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான 19 வயது இளைஞர் மணிகண்டன் என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதையறிந்த அலமேலு, தன் மருமகளையும், கல்லூரி மாணவனையும் அழைத்து எச்சரித்திருக்கிறார். இதனால், பயத்தில் இருந்த இருவரும், விவகாரம் ஊராருக்கு தெரிந்து விடக்கூடும் என்ற பதற்றத்தில் அலமேலுவை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், அலமேலுவின் மருமகளையும், கல்லூரி மாணவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story