திடீரென ஊருக்குள் திரும்பிய வெள்ளம்.வீடுகளுக்குள் ஆறு போல ஓடும் கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காவேரிபட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழை எதிரொலியாக, எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். வீடுகளில் இருந்த தங்களது உடைமைகளை மக்கள் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஊழியர்கள், மழைநீரை வெளியேற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
Next Story