தோண்ட தோண்ட வரும் பொருட்கள்.. 75 செ.மீ ஆழத்தில் கிடைத்த வினோதம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னனூர் கிராமத்தில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை,சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் உள்ளிட்ட தொல்பொருட்களும் 75 செ.மீ ஆழத்தில் இரும்பினால் ஆன ஏர் கலப்பையின் கொழுமுனையும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் எக்காலத்தினைச் சார்ந்தது என்பது முழுமையான ஆய்விற்கு பிறகு தெரியவரும் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்