"கைய புடிச்சி கூட்டிட்டு போனாங்க".. காதலனுடன் இருந்த மனைவியை வீட்டிற்குள் வைத்து பூட்டிய கணவன்
போச்சம்பள்ளி அடுத்த வீரா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு தன் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார். தம்பதிக்கு குழந்தை உள்ள நிலையில், இருவரும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்திருக்கின்றனர். இந்நிலையில், தாய் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சமாதானம் பேசிய பழனிவேல், ஒரு கட்டத்தில் மனைவியுடன் மாமியார் வீட்டிலேயே தங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, தன் மனைவி அவரின் உறவினர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக பழனிவேல் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது குறித்து கேட்டதில் இருவருக்குமிடையே தகராறானதாகவும், பழனிவேலிடம் விவாகரத்து கேட்டு அவரது மனைவி நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீடு திரும்பிய பழனிவேல், வீட்டிற்குள் தன் மனைவி அவரின் காதலனுடன் இருப்பதாக கூறி மனைவியை வீட்டிற்குள் பூட்டி வைத்து தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.