திடீரென கேட்ட அலறல் சத்தம் -அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய தாய் -கரூர் அருகே பரபரப்பு
குளித்தலை அருகே நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்... இவரது பேரன் திருக்குமரன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் ஃபேனின் பிளக்கை மாட்டியபோது திருக்குமரன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைப் பார்த்த சீனிவாசன், பேரனைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு திருக்குமரனின் தாய் ரேவதி, இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தபோது மூவரும் மின்சாரத்தில் சிக்கினர். இதனையடுத்து உடனடியாக மெயின் சுவிட்சை சிறுவனின் தந்தை ஆஃப் செய்தார். இந்த விபத்தில் தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்த நிலையில் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story