லாட்ஜில் திடீர் ரெய்டு.. சிக்கிய 1 மைனர் பையன், 2 மைனர் பெண்கள்.. பார்த்ததும் அதிர்ந்த அதிகாரி
கன்னியாகுமரியில் 18 வயதுக்கு குறைவான காதல் ஜோடிக்கு அறையை வழங்கிய தனியார் விடுதி உரிமையாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்களுக்கு 17 வயது. இரண்டு ஆண்களில் ஒருவருக்கு 17 வயது, மற்றொரு ஆணுக்கு 22 வயது. தனியார் விடுதியில் இவர்கள், ஒரே அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். 22 வயதான சந்தீஸ்குமார் என்பவர், தனது ஆதார் கார்டை காண்பித்து அறையை எடுத்துள்ளார். இந்நிலையில், திடீர் சோதனையை நடத்திய போலீசார் நான்கு பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, 22 வயது இளைஞரான சந்தீஸ்குமார், லாட்ஜ் உரிமையாளர் மற்றும் லாட்ஜ் மேலாளர் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோவில் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.