போன் டவரால் புற்றுநோய்..? உயிர் பயத்தில் கொதிக்கும் குமரி மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாவலடி பகுதியில், தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று, கடந்த 2022-ஆம் ஆண்டில் திடீரென டவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அப்போது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் டவர் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதையறிந்த முளகுமூடு பேரூராட்சி தலைவி ஜெனுஷா, மக்களுடன் சேர்ந்து டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார். இப்பகுதியில் பலர் புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளதாகவும், மீண்டும் டவர் அமைக்க முயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜெனுஷா தெரிவித்துள்ளார்.
Next Story