திறக்காத கதவு.. தரையில் கிடந்த ரத்தம்.. உள்ளே உடல்.. குமரியில் பெரும் பரபரப்பு

x

கன்னியாகுமரி அருகே, உடல் முழுவதும் இரத்தம் வழிந்த நிலையில், தூ*க்கில் தொங்கிய இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இனையம்புத்தன்துறை கிராமத்தை சேர்ந்த 37-வயதான முகமது சம்நாத்க்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபட்டால், தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், முகமது சம்நாத் வீடு, நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. சந்தேகமடைந்து அருகே வசிப்பவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் உடலில் காயங்களுடன் தூ*க்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது குறித்த புகாரைத்தொடர்ந்து உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்