பாரில் மகன் முன் கிழிந்த தாயின் முகத்திரை..அசிங்கம் தாங்காமல் வெறியாட்டம் ஆடிய மகன்...
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரை நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த டேவிட், திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மதுபாரில் நிர்மல் என்பவருடன் ஏற்பட்ட தகராறில், நிர்மலின் தாயார் தன்னுடன் குடும்பம் நடத்தி வருவதை கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நிர்மல், மது போதையில் இருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து , சவாரிக்கு அழைப்பது போல் அழைத்து ஆள் நடமாட்டம் இல்லாத நெடுமாணி குளம் பகுதிக்கு டேவிட்டை வரழைத்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த டேவிட் உயிரிழந்தார். இதையடுத்து, காரில் தப்பி சென்ற நிர்மலை போலீசார் கைது செய்தனர்.