குமரியை புரட்டிய திடீர் வெள்ளம்.. பாலம் எல்லாத்தையும் அடிச்சி இழுத்து சென்ற கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலை - குற்றியார் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மலைக்கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால், கோதையார் மின் நிலையத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மோதிரமலை தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மாங்காமலை, விளாமலை, குற்றியார், கல்லார் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
Next Story