பெயரால் வெடித்த தகராறு...காங் Vs கம்யூனிஸ்ட் - கைது...முற்றுகை.. ஜாமின் - குமரியில் அதிர்ச்சி

x

பெயரால் வெடித்த தகராறு...காங் Vs கம்யூனிஸ்ட் - கைது...முற்றுகை.. ஜாமின் - குமரியில் அதிர்ச்சி

குமரி மாவட்டத்தில் உயர்கோபுர மின்விளக்கு கல்வெட்டில், பெயர் போடுவதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே நிகழ்ந்த மோதலால், பரபரப்பு ஏற்பட்டது.

நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மேம்பாட்டு நிதியின் கீழ் உயர்கோபுர மின்விளக்கு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த கோபுர விளக்கின் கீழ் அமைக்கப்பட்ட கல்வெட்டில், எம்.பி பெயர், கொல்லங்கோடு நகர்மன்ற தலைவி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வார்டு கவுன்சிலர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இது அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஏற்கனவே பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு அந்த பகுதியில் இருந்து மாற்றப்பட்டு, எம்பி பெயர் மட்டும் பதித்து, அதற்கான திறப்புவிழா நடைபெறுவதாக இருந்தது.

இதையறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு குவிந்து விஜய் வசந்த் எம்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி உட்பட இருவரை, வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்நிலைய அழைத்து வந்துள்ளார். இதனையறிந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.


Next Story

மேலும் செய்திகள்