கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி 1 மாதத்தில் மரணம் - உறவினர்கள் செய்த செயல்
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர், பிரின்ஸி. இவருக்கு சுனில்குமார் என்ற கணவரும்,12 மற்றும் 10 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன், பிரின்ஸி தனது கள்ளக்காதலன் அபினேஷுடன் ஓடிவிட்டார். போலீசார் பிரின்ஸியை காவல்நிலையம் அழைத்து விசாரிக்கவே, தனக்கு கணவரும் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் பிரின்ஸி த*கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரின்ஸியின் உடலை அவரது கணவர் சுனில்குமார் வீட்டிற்கு போலீசார் எடுத்து சென்றனர். இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பிரின்ஸியின் உடல் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Next Story