நீருக்குள் மூழ்கி இறந்த உயிர்கள்.. ஆதாரத்தை காட்டிய பெண்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுவனூர், கானாங்காடு பாக்கம், அத்தியூர், மூக்கனூர் என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏதாவது கொஞ்ச நெல்லாவது கிடைத்துவிடாதா என நீருக்குள் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் கையால் அறுவடை செய்யும் காட்சிகள் கவலையளிக்கிறது. பெரும் இழப்பை சந்தித்து இருப்பதாக கூறும் விவசாயிகள், அதிகாரிகள் ஆய்வு செய்து தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
Next Story