3 மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் - தீவிர வேட்டையில் போலீசார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையடிவாரத்தில் 3 மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக வியாபாரி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்லிகைப்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக போலீசார் மல்லிகைப்பாடி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாரயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கள்ளச்சாராயம் விற்ற விவகாரத்தில் சாராய வியாபாரி ஏழுமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்
Next Story