"எங்கடா இங்க இருந்த காளைய காணாம்..!"...அனல் பறக்க ஓடிய காளைகள்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளை விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவில், வேலூர் மட்டுமின்றி வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்து வரப்பட்டன. ஓடுபாதையில் குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இவ்விழாவை, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story